ஏமாற்றம் அளித்த சர்வ கட்சி மாநாடு! ஜனாதிபதியின் கருத்தில் அதிருப்தி: சுமந்திரன் காட்டம்

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஏமாற்றம் அளித்த சர்வ கட்சி மாநாடு! ஜனாதிபதியின் கருத்தில் அதிருப்தி: சுமந்திரன் காட்டம்

ஜனாதிபதியுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம், அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 ஜனாதிபதி எங்களை இரண்டில் ஒன்றை தெரிவு செய்யச் சொல்கிறார். ஒன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த இணங்க வேண்டும் அல்லது 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறுகிறார்.

 இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பது தான் அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியுமாயின் அதன் அதிகாரங்கள் குறித்து ஏன் கலந்துரையாட முடியாது என்று எங்களுக்கு புரியவில்லை.

 எனவே, குறித்த மாநாட்டை நிறுத்துவதற்கு நாங்கள் முடிவு செய்தோம். மாநாட்டின் ஊடாக எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை.

 நாங்கள் சந்தேகத்துடன் வந்தது போன்றே இங்கு இடம்பெற்றது. தேர்தல் குறித்து கதைக்கும் போது ஜனாதிபதி அச்சத்துடனேயே இருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

 கலந்துரையாடல் முற்றிலும் அதிருப்தியாகவே அமைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!