வாராந்தம் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
#SriLanka
#Death
#Hospital
#Lanka4
#Dengue
Kanimoli
2 years ago
வாராந்தம் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் கடந்த 23ஆம் திகதி வரை மாத்திரம் 54,779 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வாரங்களில், நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.