மாணவர்களின் போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்
#SriLanka
#Protest
#students
Prathees
2 years ago
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் இன்று நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சுற்றுவட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி மனிங் மார்க்கெட்டில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அளுத்கடை இலக்கம் 05 இல் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.