ஜூலை மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
#SriLanka
#Tourist
#Lanka4
Kanimoli
2 years ago
ஜூலை மாதத்தில் இதுவரை 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 23 நாட்களில் 104,664 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்ததாக அதிகார சபை குறிப்பிட்டது.