தெரணியகல தோட்ட அத்தியட்சகர் படுகொலை வழக்கு : 18 பேரின் மேன்முறையீட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தெரணியகல நூரி தோட்டத்தின் தோட்ட அத்தியட்சகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் கோரப்பட்ட போது, சிறைச்சாலையில் இருந்த குற்றவாளிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தெரணியகல நூரி தோட்டத்தின் தோட்ட அத்தியட்சகர் திரு. நிஹால் பெரேராவை 2013 ஜூலை 5 ஆம் திகதி படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் தெரணியகல உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க எனப்படும் "அத்தா கோட்டா" உட்பட 18 பிரதிவாதிகளுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த 18 பிரதிவாதிகளும் அந்த தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.