கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் நியாயமாக முன்னெடுக்காவிடின் தக்க பாடம் புகட்டப்படும்
#SriLanka
#Muslim
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் தமது செயற்பாடுகளை சகல இன மக்களுக்கும் நியாயமாக முன்னெடுக்காவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இம்ரான் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்று தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அவருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடித்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.