வவுனியா பிறந்தநாள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடந்த 23ஆம் திகதி வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாடிய போது பத்து பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கிவிட்டு பெற்றோல் ஊற்றி வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
அவ் சம்பவத்தில் 21 வயதான பாத்திமா சம்மா சபீதிர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த வீட்டின் உரிமையாளர் உட்பட 9 பேர் தீக்காயமடைந்து பலத்த காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த யுவதியின் கணவர் சுகந்தன் நேற்று மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் அவரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த (23) உயிரிழந்த பெண்ணின் கணவர் 36 வயதுடைய சுகந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இச்சம்பவம் வவுனியாவில் பலரை பாதித்துள்ளதுடன் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த சம்பவத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், \இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.



