சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியது!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் பிரதான நோக்கத்துடன் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), தேசிய சுதந்திர முன்னணி (NFF) மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவை தமது பங்கேற்பை முன்னர் உறுதிப்படுத்திய நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அவர்கள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர். மேலும் ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.