முல்லைத்தீவில் நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!

#SriLanka #Protest #Lanka4
Thamilini
2 years ago
முல்லைத்தீவில்  நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2500 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு நீதி கோரி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வரும் (28.07) ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வுகளில் இருந்து வெளிபடும் எச்சங்கள் எங்கள் உறவுகளுடையதா என்ற கேள்வி எழுவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டி வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயத்தில் இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கவேண்டி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்தில் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த மக்களையும் ஒன்றுக்கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!