கனமழை காரணமாக டெல்லியில் ஆரஞ்சு எச்சரிக்கை
#India
#Delhi
#Rain
#HeavyRain
#Tamilnews
#Breakingnews
Mani
1 year ago

வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.
தொடர் மழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக டெல்லியின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பல இடங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.



