பேலியகொடவில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது

#SriLanka #Arrest #Police #Protest
Mayoorikka
2 years ago
பேலியகொடவில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மெனிங் பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த குழு இன்று (26) காலை பேலியகொடை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையில் வர்த்தக நிலையங்களை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையினை முன்னிறுத்தி அதன் வர்த்தக சங்கம் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்ததுடன், அதற்கு நீதிமன்றமும் நேற்று (25) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

 எவ்வாறாயினும், இன்று பேலியகொடை மெனிங் சந்தையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!