வாக்னர் கூலி படையினரை பிரித்தானியா அவசரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்!

"வாக்னர்" கூலிப்படையின் அச்சுறுத்தலை பிரித்தானியா குறைவாக மதிப்பிட்டுள்ளது எனவும், வாக்னர் கூலிபடையினருக்கு எதிராக வலுவான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் சட்டமியற்றுபவர்களின் சக்தி வாய்ந்த குழு அறிவித்துள்ளது.
வாக்னர் குழுவினரின் செயற்பாட்டினால் பிரித்தானியாவிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து அறிவிக்கும் 78 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வெளியுறவுக் குழு, வாக்னர் மீது பிரிட்டன் விதித்த பொருளாதாரத் தடைகள் "குறைவானவை" என்றும், ரஷ்யாவின் படையெடுப்புப் படைகளின் ஒரு பகுதியாகப் போரிட்ட வாக்னர் படையினர் குறித்து பிரித்தானியா அதிக கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்னர் நெட்வொர்க்கை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அவசரமாக தடைசெய்ய வேண்டும் என குறித்த குழு வலியுறுத்தியுள்ளது.
வக்னர் குழுவினர் சர்வதேச கிரிமினல் மாஃபியாவைப் போலச் செயல்படுகின்றது எனவும், ஆப்பரிக்காவில், பல சர்வாதிகாரங்களுக்கு ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்குகிறது என்றும் சட்டதரணிக்ள குழு தெரிவித்துள்ளது.



