வவுனியாவில் வீடு புகுந்து கொடூர தாக்குதல்-உயிரிழந்த பெண்ணின் கணவரும் மரணம்

#SriLanka #Vavuniya #Death #Lanka4
Kanimoli
2 years ago
வவுனியாவில் வீடு புகுந்து கொடூர தாக்குதல்-உயிரிழந்த பெண்ணின் கணவரும் மரணம்

வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்,இவரது கணவரான சுகந்தன் உற்பட 10 பேர் பலத்த காயங்களுடன் வவுகியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவரான சுகந்தன் இன்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

 இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில்,10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!