கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
#SriLanka
#water
#Lanka4
Thamilini
2 years ago
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான நீர்விநியோகம் இன்று (26.07) காலை 8.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மைம்புல, மடுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.