இலங்கை கடற்பகுதியில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்!

#SriLanka
Thamilini
2 years ago
இலங்கை கடற்பகுதியில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதற்கான அறிவியல் விளக்கத்த விஞ்ஞானிகள் முதல் முறையாக கூறியுள்ளனர். 

இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத் துளை என்று அழைக்கப்படுகிறது. சராசரி உலகளாவிய ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இந்த துளை 3 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பளவில் பரவியுள்ளது. 

இந்த பள்ளம் பகுதியில் கடல் மட்டம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 106 மீட்டர் கீழே உள்ளது. 1948 ஆம் ஆண்டில், டச்சு புவியியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை முதன்முறையாக மேற்கொண்டது,  ஆனால் தற்போதுள்ள அழுத்த சூழ்நிலைக்கான காரணம் இன்னும் விளக்கப்படவில்லை. 

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 20 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள டெக்டோனிக் தகடுகளின் செயல்பாடுகளுக்கு அறிவியல் விளக்கம் அளித்துள்ளது.

 பூமியின் உட்புறத்தில் இருந்து எரிமலைக்குழம்பு மோதியதாலும், டெக்டோனிக் தகடு ஒன்றின் மூலமும் இந்த குழி உருவானது என்று தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!