களனி ரயில் பாதைய மின்மயமாக்குவதற்கு முதலீடுகள் கோரப்பட்டுள்ளன!
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பில் இருந்து அவிசாவள வரையிலான களனி ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நான்கு நாடுகளிடம் இருந்து முதலீடு கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை எந்தவொரு உறுதியான முதலீட்டு யோசனையையும் எவரும் முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சொந்தமாக இயக்குதல் (BOO) மற்றும் பில்ட் ஓப்பரேட் டிரான்ஸ்ஃபர் (BOT) அமைப்புகளின் கீழ் இந்த ரயில் பாதையை அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில்களை இயக்கும் வகையில் ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கான முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக குறித்த நான்கு நாட்டு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.