தழிழ் மக்களுக்கு தீர்வு: புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும்!

#SriLanka #Tamil People #M K Sivajilingam #Tamilnews
Mayoorikka
2 years ago
தழிழ் மக்களுக்கு தீர்வு: புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும்!

இலங்கைக்குள் எந்வொரு அரசியல் தீர்வும் கிடைக்காது. இந்த அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக்குலாவுவதற்கும் நாம் இனிமேல் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 1983 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் இலங்கைக்குள் எந்வொரு அரசியல் தீர்வும் கிடைக்காது. இந்த அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக்குலாவுவதற்கும் நாம் இனிமேல் தயாரில்லை. அதேநேரம் அவர்கள் தரம் எலும்புத் துண்டுகளை கடிப்பதற்கும் நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 எனவே ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவரும் வாக்குளிக்கும் விதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே காலத்தின் கட்டாயம்.

 தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் மூலம் தழிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!