பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு
#Arrest
#Pakistan
#ImranKhan
#Election Commission
Prasu
2 years ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை குழு முன்பு கடந்த 11-ந் தேதி இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக வாரண்டை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
இதில் இம்ரான் கானை கைது செய்து இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் காவல்துறை தலைவரை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.



