கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் கண்டனம்

#SriLanka #PrimeMinister #Canada #Minister #Foriegn
Prasu
2 years ago
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் கண்டனம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நாட்டில் கடந்தகால மோதல்கள் குறித்து தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கதையை முன்வைத்துள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக 1983 ஜூலை 23 அன்று தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கூறியதையும் கண்டிக்கிறது.

தேர்தலை அடிப்படையாக வைத்து கனேடிய பிரதமர் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் கடந்த 23 ஆம் திகதியுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. இது குறித்து கனேடியப் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1983 இல், இலங்கை முழுவதும் பயங்கரமான தமிழர் விரோதப் படுகொலைகள் நடத்தப்பட்டன. 

இதில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றனர். மேலும் பலர் காயமடைந்தனர். பலர் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டதுடன், பலர் இடம்பெயர்ந்துச் சென்றனர். கறுப்பு ஜூலையின் கொடூரமானது பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த பல தசாப்தங்களாக ஆயுத மோதலாக மாறியதுடன், பதற்றங்களையும் அதிகரித்தது.

இந்த சோகமான நாளில், உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதற்கும் கனடியத் தமிழ் சமூகமும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களும் ஒன்றிணைந்து நினைவு நாளில் ஈடுபடும்'' என்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, கனடா பாராளுமன்றம் மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக மாற்றுவதற்கான பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இது இந்த ஆண்டு முதல் முறையாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்றும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் தொடர்ந்து உதவுவோம். பன்முகத்தன்மை எப்போதும் கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருக்கும். 

கறுப்பு ஜூலைக்குப் பின்னர், பலர் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் , ​​கனடா அரசாங்கம் 1983 இல் ஒரு சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தை நிறுவியது. மேலும் 1,800 தமிழ் மக்கள் கனடாவுக்கு வந்து புதிய வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தனர். இது உலகின் மிகப்பெரிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் சமூகத்தை உருவாக்கியது.

கடந்த ஆண்டுகளில் பல தமிழ்-கனடியர்களைச் சந்தித்து, கறுப்பு ஜூலை பற்றிய அவர்களின் துயரமான நினைவுகளைக் கேட்கவும், உயிரிழந்தவர்கள் நினைவுகளைக் கௌரவிப்பதில் அவர்களுடன் சேரவும், அவர்கள் நம் நாட்டிற்குச் செய்த பல முக்கியப் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

கருப்பு ஜூலை மற்றும் அதைத் தொடர்ந்த வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் கனடா அரசாங்கத்தின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 மேலும் வெறுப்பு இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்." என கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!