அரச பதவியிலிருந்து நீக்கப்பட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்

#China #government #Resign #Minister
Prasu
2 years ago
அரச பதவியிலிருந்து நீக்கப்பட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்

சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. 

அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கின் கேங் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. கின் கேங் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

ஆனால் அவரது பதவிநீக்கம் தொடர்பான உத்தரவில் அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கிற்கு பதிலாக கின் கேங் வெளியுறவு மந்திரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!