அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.30 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்
#India
#Temple
#Delhi
#people
#Tamilnews
Mani
2 years ago

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகைகளில் இயற்கையாக உருவான பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போது வரை 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, 62 நாட்கள் யாத்திரையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



