ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை முறைப்பாடு
#SriLanka
#Srilanka Cricket
#Lanka4
#Cricket
Kanimoli
2 years ago
2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் செலவிட்ட தொகை குறித்து கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை கொண்டு விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முறைப்பாடளித்துள்ளார்