சர்வதேச கூட்டுறவாளர் தினம் இன்று
#SriLanka
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
சர்வதேச கூட்டுறவுதினத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஜி.டி சரத் வீரசிறி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சிவகுமார், கூட்டுறவு முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறந்த கூட்டுறவாளர்கள் மற்றும் கூட்டுறவு பணியாளர்கள் முகாமையாளர்கள் கூட்டுறவாளர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.