மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முட்டை தட்டுபாடு விலை அதிகம்

#SriLanka #Egg #Lanka4
Kanimoli
2 years ago
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முட்டை தட்டுபாடு விலை அதிகம்

குறிப்பாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான மஸ்கெலியா, சாமிமலை மற்றும் நல்லதண்ணி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களில் முட்டை தட்டுபாடு நிலவிவருகிறது. ஒர் இரு வர்த்தக நிலையங்களில் முட்டை இருந்த போதிலும் 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய பட்ட நிலையில் உள்ளதாக பாவனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 அத்தோடு தோட்ட பகுதியில் உள்ள விற்பனை நிலையங்களில் 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுவதாகவும் இதனால் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தற்போது முட்டை, மீன், கோழி, இறைச்சி உண்ண முடியாத நிலையில் உள்ளதாகவும் அதே நேரத்தில் மரக்கறி வகைகள் பாரிய அளவில் விலை உள்ளது எனவும் தொடர்ந்து உணவு பண்டங்கள் இப் பகுதியில் நாளாந்தம் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்ய பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். 

 ஆகையால் வர்த்தக அமைச்சர் கவனம் செலுத்தி மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் தலா ஒரு சத்தோச விற்பனை நிலையம் திறந்து வைக்க வேண்டும். அத்துடன் அந்த அந்த நகரில் முறையாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் சகல பொருட்களை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!