இன்று 22 கரட் தங்கத்தின் விலை 1900ரூபாவால் சடுதியான அதிகரிப்பைக் காட்டியது
#SriLanka
#prices
#Lanka4
#இன்று
#இலங்கை
#லங்கா4
#தங்கம்
#Gold
#விலை
Mugunthan Mugunthan
2 years ago
இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கொழும்பு - செட்டியார் தெரு தகவல்களின் படி சடுதியான உயர்வை காட்டியது.
செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்று (24), 22 கரட் தங்கப் பவுண் விலையானது 156,300 ரூபாயாக பதிவாகியிருந்தது. 24 கரட் தங்கப் பவுண் விலையானது விலையானது 169,000 ரூபாயாக காணப்பட்டது.
இந்த நிலையில், செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்று(25), 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாயாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாயாக காணப்படுகிறது.
இதேவேளை வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கத்தின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. மேலும் 24 கரட் தங்கத்தின் விலையானது 170,000 ரூபாவையும் தாண்டியிருந்தது.