இந்தியாவை திருப்திபடுத்த சர்வக்கட்சி மாநாடு நடத்தக்கூடாது - திஸ்ஸ அத்தநாயக்க!
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்றால் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து ஐக்கி மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், சர்வ கட்சி மாநாடு உண்மையான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் போது எந்தவொரு கலந்துரையாடலும் வெற்றியளிப்பதாகவும், இது அரசியல் விளையாட்டாகவும், சூழ்ச்சியாகவும் அமையக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பிற்பாடு சகல தேர்தல்களும் அடுத்த வருடத்துக்கள் நடத்தப்படும் என்ற எதிர்பாரப்பு நிலவுகிறது. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சஜித் பிரேமதாசவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
13 ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பானதாக இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோருகிறோம். ஜனாதிபதியின் செயற்பாடுகளாலையே ஆறு வருடங்களுக்கும் மேலமாக மாகாண சபையின் செயற்பாடுகள் முடக்கிக் கிடக்கின்றன.
இந்தியாவை திருப்பதிப்படுத்தவும்,தமிழ் அரசியல் கட்சிகளை திருப்படுத்தவும் இந்த சர்வகட்சி மாநாடு அமையக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது அபிப்பிராயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.