20 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பெண்ணுக்கு மரண தண்டனை

#SriLanka #Court Order #Singapore
Prathees
2 years ago
20 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பெண்ணுக்கு மரண தண்டனை

பெண் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சிங்கப்பூர் தயாராகி வருகிறது. சிங்கப்பூரில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 2018ஆம் ஆண்டு 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 மேலும், 50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 56 வயது நபருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற சிங்கப்பூர் தயாராகி வருகிறது.

 சாங்கி சிறையில் சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனினும், நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!