ஜனநாயகத்தின் மீது விழுந்த மரண அடி : நீதித்துறை சட்டத்தால் கொந்தளிக்கும் இஸ்ரேல் மக்கள்!

#world_news #Israel #Lanka4
Dhushanthini K
2 years ago
ஜனநாயகத்தின் மீது விழுந்த மரண அடி :  நீதித்துறை சட்டத்தால் கொந்தளிக்கும் இஸ்ரேல் மக்கள்!

சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்த மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக சுமார் 30 வாரங்களாக மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். 

இந்நிலையில் குறித்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. 

புதிய சீர்திருத்தங்களின்படி, அரசு எடுக்கும் முடிவு நீதிமன்றத்தால் தணிக்கை செய்யப்பட்டால், அது ரத்து செய்யப்பட்டு, அந்த முடிவு செயல்படுத்தப்படும்.

இந்த மசோதாவிற்கு எதிராக போராடி வருபவர்கள்,  இது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடியாக இருக்கும் என்று வலியுறுத்துகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!