காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
#India
#Death
#Attack
#GunShoot
#Terrorist
#Tamilnews
#IndianArmy
Mani
2 years ago

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு பயங்கரவாதிகள் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்தனர். கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. சதி திட்டத்திற்காக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



