காணாமல் போயுள்ள சிறுமியை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்

#SriLanka #Police #Investigation #Lanka4
Kanimoli
2 years ago
காணாமல் போயுள்ள சிறுமியை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய பெண் பிள்ளையொன்று காணாமல் போயுள்ளார். காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், அவரைக் கண்டு பிடிப்பதில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் – 0718 591 630

 நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் – 0312 222 227

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!