மும்பையில் 18.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

#India #Tamilnews #Breakingnews #ImportantNews #Mumbai
Mani
2 years ago
மும்பையில் 18.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

மும்பையின் தானே பகுதியில் உள்ள இரண்டு தனித்தனி இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். கார்கர் ரயில் நிலையம் அருகே சோதனை நடத்தியபோது, ​​சந்தேகத்தின் பேரில் 2 நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இவர்கள் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4.40 லட்சம் மதிப்புள்ள 44 கிராம் மெத்தகுலோன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்றொரு இடமான ஏபிஎம்சி காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு இடத்தில் ஏஎன்சி நடத்திய சோதனையில் ஒருவரிடம் இருந்து ரூ. 13.65 லட்சம் மதிப்புள்ள 2.60 கிராம் எடையுள்ள 91 எல்எஸ்டி கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எங்கிருந்து போதைப்பொருள் கிடைத்தது, யாருக்கு விற்க திட்டமிட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!