சூதாட்ட வரி ஒழுங்குமுறை சட்டமூலம் பாராளுமன்ற அமர்வில் கொண்டுவர முடிவு

#SriLanka #Lanka4 #srilankan politics #Ranjith Siambalapitiya
Kanimoli
2 years ago
சூதாட்ட வரி ஒழுங்குமுறை சட்டமூலம்  பாராளுமன்ற அமர்வில் கொண்டுவர முடிவு

சூதாட்டம் மற்றும் சூதாட்டம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய; “.. சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகள் ஒழுங்குமுறை சட்டமானது சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகளை திருத்தும் சுற்றறிக்கை அல்லது விதிமுறைகளை கொண்டு வருகிறது. இதற்கிடையில், சூதாட்டம் மற்றும் பந்தய வரிகளை அதிகரிப்பது தொடர்பான விதிமுறைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 அல்லது 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ளோம்.

 குறிப்பாக, அவற்றை செயல்படுத்துவதில் தாமதம் இருக்காது. ஏப்ரல் முதல் திகதியில் இருந்து இவற்றை அமுல்படுத்துவோம். அடுத்த பாராளுமன்றக் காலப்பகுதியில் அடுத்த மாதம் 8 அல்லது 9 ஆம் திகதி அந்த விதிமுறைகளை கொண்டு வர முடியும். ஆனால் அந்த வரிகள் 2023 ஏப்ரல் முதல் நாளிலிருந்து விதிக்கப்படும்..”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!