இந்திய மணிப்பூர் மாநிலத்துக்குள் மியன்மாரிலிருந்து 718 பேர் இடம்பெயர்வு

இந்திய மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்ட மியான்மார் வாசிகள் புலம்பெயர்ந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.
ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளார். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தபோதே சட்டவிரோத வருகைகளை ஊக்குவிக்கக்கூடாது.
கடுமையான கெடுபிடிகளைக் கடைபிடித்து முறையான பயண ஆவணங்கள் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு மணிப்பூர் மாநில அரசு வலியுறுத்தியிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தோம் என்று ஜோஷி சுட்டிக்காட்டினார்.
விளக்கம் சொல்லும் அசாம் ரைஃபில்ஸ்: ஆனால் இது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறை கவனத்துக்கு கொண்டு வந்ததாக அசாம் ரைஃபில்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி சாண்டெல் மாவட்டம் வழியாக மியன்மாரில் இருந்து மணிப்பூரில் 718 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக காவல் துணை ஆணையருக்கு தகவல் அனுப்பியதாக அசாம் ரைபிள்ஸ் படை தெரிவித்துள்ளது.
மியன்மாரின் காம்பெட் பகுதியில் நடைபெறும் மோதல் காரணமாகவே அவர்கள் புலம்பெயர்ந்து தஞ்சம் புகுந்ததாக விளக்கியதை அப்படைப்பிரிவு தெரிவித்தது.



