2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என மத்திய அரசு உறுதி
#India
#Tamil Nadu
#Bank
#Tamil People
#Tamil
#Tamilnews
#money
#corruption
Mani
1 year ago

தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மே 19ஆம் தேதி அறிவித்த ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகள் இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார்.
அதில் அவர், 'தற்போதைய நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை' என தெரிவித்தார்.
2,000 ரூபாய் நோட்டுகள் போன்ற உயர்மதிப்பு நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விக்கும், இல்லை என அவர் பதிலளித்தார்.



