கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ காரணமாக 2,500 பேர் வெளியேற்றம்

#world_news #fire #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ காரணமாக 2,500 பேர் வெளியேற்றம்

கிரீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் ஒரு பகுதியான கோர்பு தீவில் திடீரென காட்டுத் தீ பல இடங்களில் பரவியது. இதனால், தீயை அணைப்பதில் வீரர்கள் சிரமப்படுகின்றனர். தற்போது, ​​மொத்தம் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்ப கூடிய ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது. இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதாக சி.என்.என். ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

கிரீஸ் நாட்டில் இதுவரையில்லாத வகையில் ஏற்பட்ட பெரிய காட்டுத்தீ இது என நிபுணர்கள் கணித்துள்ளனர். வெப்ப அலையால் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால், பல இடங்களில் தீ பரவி பாதிப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து அரசாங்கம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என மொத்தம் 16,000 நபர்கள் தரை வழியாகவும், 3,000 பேர் கடல் வழியாகவும் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த வார இறுதிக்குள் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ரோட்ஸ் தீவானது, கிரீஸ் நாட்டின் மிக பெரிய விடுமுறை கொண்டாட்டத்திற்கான தலங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 25 லட்சம் பார்வையாளர்கள் இந்த தீவுக்கு வருகை தந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!