காட்டுத்தீ தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முக்கிய அறிவிப்பு
#SriLanka
#fire
#Mobile
#Emergancy
Prasu
2 years ago
காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 117 என்ற அவசர உதவி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினராலும் கடந்த சில தினங்களில் காட்டுத்தீ வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.
மஹியங்கனை தம்பான மாவரகல வனப்பகுதியில் தொடர்ந்தும் காட்டுத்தீ பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் 70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.