நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பட்டம்!
#SriLanka
#Colombo
#Protest
Mayoorikka
2 years ago
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வுதியம் கொள்ளையை நிறுத்து என்று வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதனால் கொழும்பு புறக்கோட்டையின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி சந்தியில் இருந்து காலி முகத்திடல் நுழைவு வீதி தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
