கார் கால்வாயில் கவிழ்ந்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு
#India
#Death
#Accident
#Women
#Tamilnews
#Died
#Pregnant
Mani
2 years ago

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் நீரஜ், 35 வயது. இவரது மனைவி வினிதாவுக்கு வயது 25. நிறைமாத கர்ப்பிணியான வினிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவளை காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு உறவினர்களும் வந்தனர். இந்த வாகனத்தை சிவம் குமார் என்ற டிரைவர் இயக்கி வந்தார்.
சாலையில் வேகமாக சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கர்ப்பிணியான வினிதா உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



