புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்ற நடவடிக்கை!

#SriLanka #Department #Train
Mayoorikka
2 years ago
புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்ற நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 உலகெங்கிலும் உள்ள ரயில் சேவைகளை ஆய்வு செய்யவுள்ள இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து பின்னர் அந்த குழு தேவையான பரிந்துரைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!