மாருதி சுசுகி கார் நிறுவனம் எடுத்துள்ள முடிவு: 90 ஆயிரம் கார்கள் திரும்ப பெறப்படும்
#SriLanka
#vegacar
Mayoorikka
2 years ago
பிரபல மாருதி சுசுகி நிறுவனம், சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
எனவே, 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை மாருதி சுசகி விற்பனையகமே தொடர்பு கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
கார்களை ஆராய்ந்து, அதில் பழுதாக வாய்ப்புள்ள பொருள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.