சர்வகட்சி மாநாடு பற்றி சஜித்-அனுர எடுத்துள்ள தீர்மானம்
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
#AnuraKumaraDissanayake
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (26) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். கலந்துரையாடலில் இணைவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காது என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.