வங்கிக் கணக்குகள் திறப்பதற்கு மக்கள் நீண்ட வரிசை!

#SriLanka #Bank #money
Mayoorikka
2 years ago
வங்கிக் கணக்குகள் திறப்பதற்கு மக்கள் நீண்ட வரிசை!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் தொகையை பெறுவதற்கு வங்கிக் கணக்கள் அவசியம் என்பதால் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசையில் காணப்படுகின்றன.

 முதற்கட்டமாக பயனாளிகளுக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்குச் சென்று தரவு சேகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

 எனினும் நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட நலன்புரி பயனாளிகள் பட்டியலில் உள்ள சிக்கல்கள் காரணமாக பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து மேன்முறையீடுகள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் 9 லட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகளும் 17 ஆயிரத்து 500 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டன.

 எவ்வாறாயினும், தற்போது நலன்புரி திட்டத்துக்காக வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!