பாணந்துறையில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Lanka4
Thamilini
2 years ago
பாணந்துறை திக்கல சந்தியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை தோட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இடம் வழங்காத காரணத்தினால் மேற்படி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.