சர்வகட்சி கூட்டத்திற்கு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#Meeting
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வகட்சி கூட்டத்தில் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது,தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது