இந்த வருடம் முதல் 714,598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

#SriLanka #Tourist #Lanka4
Kanimoli
2 years ago
இந்த வருடம் முதல் 714,598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை 714,598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் (2022) இலங்கைக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 719,978 எனவும் தற்போதைய சுற்றுலாப் பயணிகளின் வருகையின் படி இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 இம்மாதம் கடந்த 20 நாட்களில் 89,724 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!