தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்மீதான வைத்திய அறிக்கை.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த 52 வயது உடைய மூன்று குழந்தைகளின் தந்தை உதவி வெளிக்கள உத்தியோகத்தர் செமுவேல் வின்சென்ட் என்பவர் அதே தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிர் அற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறீ மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பரிசோதனை மேற் கொண்டு வந்து உடலம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள பட்டது.
கிளங்கன்ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி திருமதி I.L.ரத்நாயக்க அவர்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் திரந்த தீர்ப்பு வழங்கியதுடன் உடற் பாகங்கள் அரச ரசாயன பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ள பத்தரமுல்லயில் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் அறிக்கை கோரியுள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
உடலம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டது என அவர் கூறினார்.