காலை நேரத்தில் சாப்பிட ருசியான முருங்கைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

#India #Tamil Nadu #Recipe #Cooking #Tamilnews #How_to_make #Tamil Food
Mani
9 months ago
காலை நேரத்தில் சாப்பிட ருசியான முருங்கைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பச்சரிசி
  • 2 கப் முருங்கைக்காய் விழுது
  • 1 வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்த் துருவல்
  • 5 மிளகாய் வற்றல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/4 கப் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு 
  • கொத்துமல்லி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

  • அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும். தேங்காய்த் துருவலையும், மிளகாய் வற்றல்களையும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகு போட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் போட்டு பொன்னிறத்தில் வறுக்கவும்.
  • பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய வெங்கயாத்துடன் முருங்கைக் காய் விழுது, புளி விழுது, பொடிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். வதக்கிய விழுதில் சாதத்தைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக விடவும். கறிவேப்பிலை,கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் சத்தான சாதம் தயார். தயிர்ப் பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.