ஐரோப்பிய ஒன்றியத்திற்கள் சட்டவிரோத குடியேறிகளை கடத்திய 64 பேர் கைது!
#Lanka4
Dhushanthini K
2 years ago

கியூபாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குடியேறியவர்களைக் கடத்தும் 62 பேரை ஐந்து நாடுகளின் சட்ட அமலாக்கப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை சர்வதேச விசாரணையை ஒருங்கிணைத்த யூரோபோல் மற்றும் இன்டர்போல் ஆகியவை இன்று (24.07) தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில், யூரோபோல் விடுத்துள்ள அறிக்கையில், கிரிமினல் நெட்வொர்க் கியூபர்களை மையமாகக் கொண்டு செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பதாயிரம் யூரோக்களுக்கு ஐரோப்பாவிற்கான ஆவணங்களை தவறாக ஒழுங்கமைத்து, சட்டவிரோத குடியேறிகளை அனுப்பிவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிரிமினல் நெட்வேர்க், 5000 கியூபா நாட்டினரை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக அனுப்பியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



