களஞ்சிய வசதிகள் இல்லாததாலும் மருந்துகள் தரமற்றவையாக மாறும் - சமன் ரத்நாயக்க
கடந்த ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற மருந்து பாவனை குறித்த சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில், இன்று (24.07) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும், பதிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யும் மருந்துகளும் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தால் அவை அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியக் கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 278 வகையான மருந்துகளில் ஒரு மருந்து மாத்திரமே தரமற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை செய்வதன் மூலம் இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் போது முறையான களஞ்சிய வசதி இல்லாத நிலையில் மருந்து தரமற்றதாக மாறும் நிலை ஏற்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.