இலங்கையில் தனது செயற்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக்கொள்ளும் நோர்வே தூதரகம்!
#SriLanka
#Lanka4
#Norway
Thamilini
2 years ago
இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கவுள்ளதாகவும், நோர்வே தூதரகம் அதன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஆகவே புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் முகநூல் பக்கத்தைப் பின்தொடருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுடனான அதன் தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் புதிய பேஸ்புக் பக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.